உடல் எடையை குறைக்க பாப் பாடகியின் புது யுக்தி

Written by vinni   // December 7, 2013   //

frankly_002அமெரிக்க பாப் பாடகி பிராங்ளி தன்னுடைய தாய்மை நிலையை வெற்றிகரமாக முடித்து பார்க்கர் என்ற அழகான ஆண்குழந்தையை பெற்றுள்ளார்.

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பிராங்ளி(24),பாப் பாடகி ஆவார். இவர் சமீபத்தில் அழகான பார்க்கர் என்ற ஆண்குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இந்நிலையில் குழந்தை பிறப்பிற்கு பின்பு தனது உடல்எடையை குறைக்கவேண்டும் என்று உறுதியெடுத்த இவர் உடற்பயிற்சியில் ஈடுபட்டார்.

ஆனால் அது மிகவும் போரடிக்கவே ஒரு புதிய யுக்தியை கையாண்டுள்ளார். அதன்படி தன் அழகிய ஆண் குழந்தையை ஒரு பையில் வைத்து தனது மார்பில் அணைத்து கட்டிக்கொண்டு கூடவே தனது செல்லநாய்க்குட்டியையையும் அருகில் விளையாட விட்டு இசையுடன் தனது உடற்பயிற்சியினை செய்து வருகிறார்.

அதுமட்டுமல்லாது தனது மகன் பார்க்கரின் பெயர் பொரித்துள்ள கைச்சங்கிலியை அன்புக்கணவர் பரிசாக கொடுத்துள்ளார்.

குழந்தை பிறப்புக்கு பின்னர் மகிழ்ச்சியில் இருக்கும் பிராங்ளி இசைநிகழ்ச்சிகளில் தன் குழந்தையுடன் பங்கேற்று வருகிறார்.


Similar posts

Comments are closed.