மண்டேலா மறைவிற்கு 5 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கும் தமிழக அரசு

Written by vinni   // December 7, 2013   //

Nelson+Mandela1தென் ஆப்ரிக்காவின் முன்னாள் அதிபரும் பாரத ரத்னா விருது பெற்றவருமான நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும்முகமாக தமிழக அரசு சார்பில் 5 நாள்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு தமிழக அரசு துக்கம் அனுஷ்டிக்கிறது.

இதன் காரணமாக டிசம்பர் 6 முதல் 10ம் திகதி வரை அரசு சார்பில் எந்த விழாக்களும், நிகழ்ச்சிகளும் நடைபெறாது.

மேலும் அரசு அலுவலகங்களில் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விட வேண்டும் என்று அரசு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 


Similar posts

Comments are closed.