நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் வதந்திகளைப் பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை

Written by vinni   // December 7, 2013   //

kottapayaதேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுமு; வகையில் வதந்திகளைப் பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் தகவல்களை வெளியிடும் தனிப்பட்ட நபர்கள் மற்றும் குழுக்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலோ அல்லது அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையிலோ செயற்படும் தனிப்பட்ட நபர்கள் அல்லது குழுக்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்‌ஷ, புலனாய்வுப் பிரிவினருக்கு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

தெற்கு கடும்போக்குடைய சிங்கள அமைப்புக்கள் அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிங்கள மற்றும் முஸ்லிம் கடும்போக்கு அமைப்புக்கள் தேச விரோத வதந்திகளை பரப்பி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புக்கள் புலிகளின் பெயரில் கடந்த காலங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்த்தாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


Similar posts

Comments are closed.