இலங்கை மனித உரிமைகள் விடயம் : சர்வதேச பங்காளிகளுடன் பேசவுள்ளதாக பிரித்தானியா தெரிவிப்பு

Written by vinni   // December 6, 2013   //

Hugo Swireஇலங்கையில் மனித உரிமைகள் விடயம் உட்பட நிலைமை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாயம் மற்றும் சர்வதேச பங்காளிகளுடன் இனிவரும் மாதங்களில் தொடர்ந்து பேசவுள்ளதாக பிரித்தானியா கூறியுள்ளது.

ஐக்கிய இராச்சியம் மீண்டும் ஐ. நா மனித உரிமைகள் பேரவைக்கு தெரிவாகியுள்ளது. மனித உரிமைகள் கவுன்ஸிலின் அமர்வு மார்ச்சில் நடைபெறும். அதற்கு முன் ஐக்கிய இராச்சியம் இலங்கை விடயத்துக்கு சர்வதேச ஆதரவை திரட்டுவதில் மும்முரமாக ஈடுபடும் என பொதுநலவாயத்துக்கான இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வயர், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்தபோது கூறினார்.

பொதுநலவாய மாநாட்டின்போது நாம் மனித உரிமைகள், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வு ஆகியவற்றில் உண்மையான முன்னேற்றத்தை காண விரும்புகின்றது. மனித உரிமைகள் பேரவை மார்ச்சில் முன்னேற்றத்தை மார்ச்சில் மதிப்பீடு செய்யும் என பிரதமர் டேவிட் கமரோன் கூறியதையும் ஸ்வயர் நினைவு கூறினார்.

யுத்த குற்றம் தொடர்பான குற்றச்சாட்டல்கள் தொடர்பாக நம்பகமான, வெளிப்படையான, சுயாதீனமான விசாரணைகளை பிரதமர் வலியுறுத்தினார். மார்ச் அளவில் இந்த விசாரணைகள் முறையாக தொடங்காதிருப்பின் நாம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஒரு சர்வதேச விசாரணையை வலியுறுத்துவோம் எனபதை தெளிவாக அவர் கூறியிருந்தார் என ஸ்வயர் கூறினார்.


Similar posts

Comments are closed.