யசூசி அகாசி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை யாழ்ப்பாணத்தில் சந்திக்க உள்ளார்

Written by vinni   // December 6, 2013   //

Yasushi Akashiயப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி எதிர்வரும் எட்டாம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்புக்கு செல்லவுள்ளதாக கொழும்பில் உள்ள யப்பான் தூதரகம் இன்று மாலை அறிவித்துள்ளது.

கொழும்பு செல்லும் யசூசி அகாசி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸவரன் மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை யாழ்ப்பாணத்தில் சந்திப்பார் என்றும் தூதரகம் கூறியுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் கொழும்பு செய்தியாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரையும் யசூசி அகாசி சந்திப்பார் என்றும் இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார் எனவும் தூதரகம் கூறியதாக செய்திகளின் கொழும்பு செய்தியாளர் கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.