காற்பந்து உலக கிண்ணத்திற்கான‌ பரிசுத் தொகை அதிகரிப்பு

Written by vinni   // December 6, 2013   //

images (1)2014ம் ஆண்டு  பிரேசிலில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள உலக கிண்ண காற்பந்து போட்டித் தொடருக்கான வெற்றிப் பணப் பரிசு தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

2010ம் ஆண்டு இடம்பெற்ற உலக கிண்ண போட்டிகளின் போது, பரிசு தொகையாக 420 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டன.

எனினும் இந்த முறை அதனை 37 சதவீதத்தால் அதிகரித்து, 576 மில்லியன் டொலர்கள் என்று சர்வதேச காற்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.

இதன்படி உலக கிண்ண தொடரை கைப்பற்றும் அணிக்கு 35 மில்லியன் டொலர்களும், இரண்டாம் இடத்தை பெறும் அணிக்கு 25 மில்லியன் டொலர்களும் வழங்கப்படும்.


Similar posts

Comments are closed.