இணையதளப் பயன்பாட்டில் அமெரிக்காவை முந்தும் இந்தியா

Written by vinni   // December 6, 2013   //

Website-Image-trans-cutஇந்தியாவில் சமீப காலங்களில் இணையதளப் பயன்பாடு அதிகரித்து வருகின்றது.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஜூன் மாதக் காலாண்டு அறிக்கையின்படி 198.30 மில்லியன் மக்கள் இணையதளம் உபயோகிப்பாளர்களாக இருக்கின்றனர். இது முந்தைய காலாண்டைவிட 20 சதவிகித அதிகரிப்பாகும்.

இதே விகிதத்தில் வளர்ச்சி நிலைமை இருந்தால் 260 மில்லியன் பயன்படுத்துபவர்கள் கொண்ட அமெரிக்காவை இந்தியா விரைவில் முந்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இங்கு கிராமப்புற பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

சென்ற அக்டோபர் இறுதியில் 68 மில்லியன் என்ற இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் 72 மில்லியனாக மாறும் வாய்ப்பிருப்பதாக இந்திய இணையதளம் மற்றும் மொபைல் சங்கம்(ஐஏஎம்ஏஐ) தெரிவித்துள்ளது.

மொபைல் தொலைபேசி மூலம் இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களே இங்கு அதிகமிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

90 சதவிகிதம் அலுவலக வேலைக்காக மொபைல் இணையதளங்களைப் பயன்படுத்தும் அமெரிக்க மக்களைப் போலில்லாமல் இந்தியாவில் சமூக மற்றும் வலைத்தொடர்புடைய இணையதளப் பயன்பாடுகளே அதிகம் காணப்படுகின்றன.

மொபைல்போன்களின் தொழில்நுட்ப வளர்ச்சியினால் கிராமப்புற பகுதிகளில் இணையதளப் பயன்பாடு அதிகரித்துள்ளது என்ற கருத்தினைத் தெரிவிக்கும் டெலாய்ட் ஹஸ்கின்ஸ் & சேல்ஸ் பங்குதாரரான ஹேமந்த் ஜோஷி இந்த வளர்ச்சி இன்னும் நீண்ட தூரம் செல்லவேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

ஐஏஎம்ஏஐயின் தலைவரான சுபா ரேயின் கருத்துப்படி கூகுள் போன்ற இணையதள நிறுவனங்களுக்கு இந்தியாவில் பெரிய அளவிலான வளர்ச்சி விகிதங்கள் சாத்தியமாக உள்ளன. இத்தகைய நிறுவனங்கள் இணையதளத்தில் ஆர்வம் காட்டும் புதிய பயனர்களை எளிதாக அதிகரிக்க முடியும் என்று அவர் குறிப்பிடுகின்றார்.


Similar posts

Comments are closed.