புதிய தொழில்நுட்பத்துடன் கனடா விமானநிலையம்

Written by vinni   // December 6, 2013   //

Libyan-airportகனடாவின் பியார்சன் பண்ணாட்டு விமானநிலையத்திலிருந்து, அமெரிக்கா செல்லுகின்ற பயணிகள் தமது கடவூசீட்டுக்களை திரையில் பதிவு செய்யும் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பம் காரணமாக விமான பயணிகள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

விமான நிலைய அதிகாரிகள், அமெரிக்கச் சுங்க அதிகாரிகள், மற்றும் எல்லைப் பாதுகாப்பு துறைக்கான இந்த தானியங்கு முறையானது புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த தானியங்கு இயந்திரங்களில் திரைகளில் கடவுட்சீட்டினை வைத்து திரையில் கேட்கின்ற கேள்விகளுக்கு பதிலளித்தல், படம்பிடித்தல் என்பன சுயமாக மேற்கொள்ளப்படும்.
இதன் பின்னர் பயணிகள் சுங்க அதிகாரிகளிடம் செல்ல செல்ல முடியும்.

குறிப்பிட்ட தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துவதன் மூலமாக பயணிகள் காத்திருக்கின்ற நேரத்தை 36 சதவீதத்தால் குறைத்துக்கொள்ள முடியும் என விமான நிலைய அதிகாரிகளுகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தொழில்நுட்ப முறையானது ஏற்கனவே 7 விமானநிலையங்களில் பரீட்சிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மொன்றியல், வன்கூவர் விமான நிலையத்தில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.


Similar posts

Comments are closed.