பிறப்புறுப்பை இழக்கும் பெண்கள்

Written by vinni   // December 6, 2013   //

black_men_002பிரித்தானியாவில் பெண்கள் பிறப்புறுப்புகள் இழந்து துயரத்தில் வாழ்கின்றனர் என்று மருத்துவக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவில் வாழும் கறுப்பு இனத்தை சேர்ந்த இஸ்லாமிய மக்களிடையே பிறப்புறுப்புகளை அழிக்கும் பழக்கம் வழக்கத்தில் உள்ளது.

இதுதொடர்பாக மருத்துவக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் 66,000 பெண்கள் பிறப்புறுப்பு அழித்தல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் இது சட்டவிரோதமாக செயல் என பிரிட்டிஷ் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் குடும்ப நல மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவர் டெபோரா லண்டனில் கூறுகையில், இது பிரித்தானியாவின் மிக பெரிய பிரச்சனையாக உள்ளது என்றும் இதனால் பாதிக்கப்படும் பெண்கள் பல பின்விளைவுகளை சந்திக்கின்றனர் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இப்பழக்கவழக்கத்தை எதிர்த்து பிரான்ஸ், நெதர்லாந்த் போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்டு பிரச்சாரம் நடக்கிறது.

சோமாலியா மற்றும் மத்திய கிழக்கு ஆசியாவில் இது ஒரு பெரும் பிரச்சனையாக உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.