மண்டேலாவின் மரணம் இந்தியாவிற்கு இழப்பு: மன்மோகன் சிங்

Written by vinni   // December 6, 2013   //

Mandela_2_0நெல்சலன் மண்டேலாவின் இழப்பு தென் ஆப்பிரிக்காவுக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கும் இழப்புதான் என்று பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

95 வயது மண்டேலா ஜோஹன்னஸ்பர்க்கில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாரத ரத்னா விருது பெற்றவர் மண்டேலா. மண்டேலாவின் மறைவுக்கு இந்தியாவும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் இதுகுறித்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மாபெரும் தலைவர் மறைந்திருக்கிறார். தென் ஆப்பிரிக்காவைப் போலவே இந்தியாவுக்கும் இது இழப்புதான் என்றும் மண்டேலா ஒரு உண்மையான காந்தியவாதி எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.


Similar posts

Comments are closed.