15 வயது சிறுமியுடன் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்ட இளைஞன் கைது

Written by vinni   // December 6, 2013   //

rape15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக் கூறப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

வென்னப்புவ ஆதம் சந்தி பகுதி தொழிற்சாலை விடுதியில் உள்ள சிறுமியே இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தனது மகள் காணாமல் போயுள்ளதாக பெற்றோர் செய்த முறைப்பாட்டை அடுத்தே 20 வயது இளைஞன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியுடன் காதல் தொடர்பை ஏற்படுத்திய இளைஞர் அச்சிறுமியுடன் கொஸ்வத்த – பொத்துவட்டவன பிரதேச வீடொன்றில் குடியிருந்துள்ளார்.

குறித்த இளைஞருடன் குடும்ப வாழ்க்கை நடத்தியதாக சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சிறுமி வைத்திய பரிசோதனைக்கென மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மாரவில மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.


Similar posts

Comments are closed.