முதல் பயணம் மேற்கொள்வர் யார்? :மன்மோகன் சிங்கா? விக்னேஸ்வரனா? : இந்தியாவில் அரசியல் ஆராய்வு

Written by vinni   // December 6, 2013   //

viknஇந்திய பிரதமர் மன்மோகன்சிங் யாழ்பபாணம் செல்வரா? அல்லது வடமாகாண முதல் அமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இந்தியாவுக்கு செல்வரா? என்ற விடயமே இலங்கையில் தற்போது முக்கியமாக பேசப்படும் விடயங்களில ஒன்றாக உள்ளது

யாழ்ப்பாணத்துக்கு கடந்த ஒக்டோபர் 28 ஆம் திகதியன்று விஜயம் மேற்கொண்டு இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஸித், இந்தியாவுக்கு வருமாறு மன்மோகனின் அழைப்பை விக்னேஸ்வரனிடம் கையளித்தார்.

அதற்கு விக்னேஸ்வரனும் பதிலை அனுப்பினார்.

இதனையடுத்து பொதுநலவாய நாடுகளின் கொழும்பு மாநாட்டின் போது மன்மோகன்சிங் யாழ்ப்பாணம் வரவேண்டும் என்று விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்திருந்தார்.

அத்துடன் மன்மோகன்சிங் யாழ்ப்பாணம் செல்வார் என்று கடந்த வாரத்தில் இந்திய நிதியமைச்சர் பா சிதம்பரமும் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் இந்திய பொதுத்தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளன.

எனவே விக்னேஸ்வரனை இந்தியாவுக்கு அழைத்தால் அதன்மூலம் காங்கிரஸுக்கான ஆதரவை தமிழகத்தில் பெற்றுக்கொள்ள முடியுமா? அல்லது மன்மோகன் சிங் யாழ்ப்பாணத்துக்கு சென்றால் அதிக தமிழக வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியுமா என்ற ஆராய்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை எதிர்வரும் மாதத்தில் விக்னேஸ்வரன் இந்தியாவுக்கு செல்வார் என்று இலங்கையின் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் அவர் தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதி ஆகியோரை சந்திப்பாரா? என்பதை குறித்த செய்திதாள் வெளியிடவில்லை.


Similar posts

Comments are closed.