புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கிய மேற்குலக நாடுகளின் முகமூடியை கழற்ற போவதாக சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி தெரிவிப்பு

Written by vinni   // December 6, 2013   //

 superdvoraஇலங்கை எதிராக அமெரிக்க உட்பட மேற்குலக நாடுகள் செயற்பட்டு வரும் நிலையில், விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கிய 8 நாடுகள் தொடர்பான தகவல்களை சாட்சியங்களுடன் வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்கள், இலத்திரனியல் உதிரிபாகங்கள் உள்ளிட்ட பொருட்களின் தயாரிப்பு இலக்கம் மற்றும் நாடுகளின் அடையாளம் இருந்துள்ளன.

அமெரிக்க அரசு வைத்துள்ள எம்.16 தாக்குதல் துப்பாக்கி, கடற்புலிகளின் படகுகளில் பயன்படுத்தப்பட்ட ரேதியோன் ரேடார் கட்டமைப்பு, பிரித்தானிய தயாரிப்பான கடல் ஸ்கூட்டர் உட்பட பல பொருட்களை புலிகளிடம் இருந்த நிலையில் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட எம்.16 ரக தாக்குதல் துப்பாக்கி அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது என பாதுகாப்பு தரப்பின் உயர்மட்ட தகவல்கள் தெரிவித்தன.

இதனை தவிர புலிகளின் இரணைமடு விமான ஓடுத்தளத்திற்கு தேவையான மின் கலன்கள், மின் விளக்குகள் என்பன பிரித்தானியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் தயாரித்தவை.

அத்துடன் 3 ஸ்லின் ரக விமானங்கள் பங்களாதேஷ் நாட்டின் விவசாய இரசாயன நிறுவனத்தின் ஊடாக கொள்வனவு செய்யப்பட்டதாக செக் குடியரசு இலங்கைக்கு அறிவித்துள்ளது.

இந்த உண்மைகளை வெளியிட்டு மேற்குலக நாடுகளின் முகமூடியை கழற்ற போவதாக சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளிடம் இருந்த ஆயுதங்களின் பெறுமதி சுமார் 1400 மில்லியன் ரூபா என தெரியவந்துள்ளது.


Similar posts

Comments are closed.