8 மாதங்களில் 237 பாலியல் பலாத்காரம் சம்பவங்கள்

Written by vinni   // December 5, 2013   //

rapeமும்பையில் கடந்த 8 மாதங்களில் மட்டும் ஒட்டு மொத்தமாக 237 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 8 கும்பல் சேர்ந்து பலாத்காரம் செய்தது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த பலாத்கார சம்பவங்களில் பெரும்பாலானவை, அந்த பெண்களுக்கு மிக அறிந்த நபர்களாக, காதலர், நண்பர் அல்லது அருகில் வசிப்பவர்களால் நடந்திருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் ஒருவர் கோரியிருந்த கேள்விக்கு காவல்துறை இந்த தகவலை அளித்துள்ளது.


Similar posts

Comments are closed.