‘காற்றிலே கலந்து காணாமல் போகும்’ விசித்திர மனிதர்

Written by vinni   // December 5, 2013   //

invisible_man_005காற்றிலே கலந்து காணாமல் போகும் விசித்திரங்களை செய்து நபர் சீன மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

 சீனாவின் சாண்டாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் லு போலின். பைன் ஆர்ட்ஸ் முதுகலை முடித்துள்ள இவர் மறைந்து போகும் கலையை கண்டறிந்துள்ளார்.

உலகத்தின் ஆறு முன்னணி பல்கலைக்கழகங்கள் இவரை தங்களது மேற்பார்வை விரிவுரையாளர் பணிக்கு அமர்த்தியுள்ளன. மக்கள் இவரை செல்லமாக ‘இன்விசிபிள் மேன்’ என்றே அழைக்கிறார்கள்.

‘நகரத்துக்குள் மறைந்து போதல்’ என்கிற தலைப்பில் சீனா முழுவதும் சென்று மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் இருக்கும் சுவர், மேஜை, நாற்காலி போல தன்னையும் வரைந்து கொண்டு மறைந்து போய் விடுகிறார்.

உதாரணத்திற்கு புத்தகக் கடையின் ரேக்கில் இருக்கும் புத்தகங்கள் போலவே உடலில் வரைந்து கொண்டு, பார்ப்பதற்கு புத்தகங்கள் போலவே நின்று கொள்கிறார்.


Similar posts

Comments are closed.