என்னிடம் ஐபோன் இல்லையே! கவலையில் ஒபாமா

Written by vinni   // December 5, 2013   //

onama_phone_003என்னால் ஒரு ஐபோன் கூட வைத்துக்கொள்ள முடியவில்லை என்று அமெரிக்காவின் அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

ஒபாமா எப்போதுமே கருப்பு நிறத்திலான, பெரிய சைஸ் பிளாக்பெர்ரி கைப்பேசியை பயன்படுத்திவருகிறார்.

இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக நான் ஐபோன் வைத்துக் கொள்ள அனுமதி இல்லை. எனவேதான் பாதுகாப்பு மிகுந்த பிளாக்பெர்ரியைப் பயன்படுத்துகிறேன் என்று ஒபாமா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், என் மகள்கள் சாஷாவும், மலியாவும் தமது ஐபோன்களுடன்தான் நாளில் பாதியைச் செலவிடுகிறார்கள். எதையாவது அதில் நோண்டிக் கொண்டே பாதி நேரத்தை அதிலேயே கழிக்கிறார்கள் என்றும் நான் வேடிக்கை பார்க்க மட்டுமே முடிகிறது எனவும் கூறியுள்ளார்.

மற்ற ஸ்மார்ட் போன்களை விட பிளாக்பெர்ரிதான் பாதுகாப்பானது. அதாவது அதன் என்கிரிப்ஷன் வலுவானுது மற்ற போன்களை ஈஸியாக ஹேக் செய்து விட முடியும். ஆனால் பிளாக்பெர்ரியை நோண்டி உள்ளே புகுவது கொஞ்சம் கஷ்டமானது என்பதால் வெள்ளை மாளிகை பாதுகாப்பு அதிகாரிகள், பிளாக்பெர்ரியை அதிகாரப்பூர்வ போனாக பயன்படுத்துகின்றனர்.


Similar posts

Comments are closed.