விற்பனைக்கு வந்த இரண்டு தொடுதிரைகளை கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி

Written by vinni   // December 5, 2013   //

smart_phone_001இரண்டு தொடுதிரைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட Yota ஸ்மார்ட் கைப்பேசியானது ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்காக அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

கூகுளின் Android 4.2.2 Jelly Bean இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாகக் காணப்படும் இக்கைப்பேசியானது 4.3 அங்குல அளவு மற்றும் 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

மேலும் 1.7GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளன.

இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 1 மெகாபிக்சலை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா போன்றனவும் காணப்படுகின்றன.

இதன் விலையானது 499 யூரோக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.