5 கிரகங்களில் தண்ணீர்: நாசா கண்டுபிடிப்பு

Written by vinni   // December 5, 2013   //

nasa_water_003மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற, ஐந்து கிரகங்களை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் பல்வேறு கிரகங்களில், மனிதன் வாழ்வதற்குரிய சூழல் குறித்து ஆய்வு செய்து வருகிறது.

இந்த ஆராய்ச்சியின் பலனாக சூரிய மண்டலத்திற்கு வெளியில் உள்ள ஐந்து கிரகங்களில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உலகம் முழுவதிலும் இருந்து கிடைத்த பல்வேறு ஆய்வறிக்கைகளை ஒப்பிட்டுப் பார்க்கையில், இந்த கிரகங்களில் தண்ணீர் இருப்பது உறுதியாகி உள்ளது.

ஆனால், ஒவ்வொரு கிரகத்திலும் வெவ்வேறு அளவில் தண்ணீர் உள்ளது. நாசா மையத்தின் சார்பில் விண்வெளியில் “ஹப்பிள்’ தொலைநோக்கி நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் உதவியுடன் ஐந்து கிரகங்களில் தண்ணீர் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


Similar posts

Comments are closed.