மீனவர்கள் அத்துமீறுவதற்கு தமிழக அரசியல்வாதிகளே காரணம்!

Written by vinni   // December 5, 2013   //

fishing boat_CIஇலங்கை கடற்பரப்புக்குள் தமிழக மீனவர்கள் அத்துமீறி நுழைவதற்கு தமிழக அரசியல்வாதிகளே காரணம் என்று இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது.

மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

நாளாந்தம் தமிழகத்தின் சுமார் 1000 படகுகள் வரை இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசின்றன.

இதனால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

இந்தநிலையில் படகு உரிமையாளர்களாக இருக்கும் சில தமிழக அரசியல்வாதிகள் இலங்கை கடற்பரப்புக்குள் சென்று மீன்பிடியில் ஈடுபடவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே மீனவர்களுக்கு படகுகளை வழங்குவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தமிழக மீனவர்களின் அத்துமீறலால் வருடம் ஒன்றுக்கு இலங்கைக்கு 97ஆயிரத்து 500 மில்;லியன் ரூபாய்கள் நட்டம் ஏற்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Similar posts

Comments are closed.