நான்கு துறைமுகங்களால் இலங்கைக்கு அச்சுறுத்தல்

Written by vinni   // December 5, 2013   //

srilanka flgஇந்தியா, சிங்கப்பூர், மலேஷியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் என்பவற்றின் துறைமுகங்கள் இலங்கைக்கு அச்சுறுத்தலாகியுள்ளன என நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் கேள்விக்கு பதிலளித்த துறைமுகங்கள் செயற்திட்ட அமைச்சர் றோஹித்த அபேகுணவர்த்தன துறைமுகங்கள் தொடர்பாக பல விவரங்களை வெளிப்படுத்தினார்.

இந்திய உப கண்டத்திலிருந்து வரும் கப்பல் மாற்றியேற்றும் சரக்குகளை ஓமானிலுள்ள சலலா துறைமுகம் கவர்ந்;து வருகின்றது. இந்திய கிழக்குக்கரை சரக்குஇ பங்களாதேஷ் மற்றும் மியன்மார் சரக்குகளை கவரும் சிங்கப்பூர் துறைமுகமும் இலங்கைக்கு சவாலாக உள்ளது.
ஓமான் துறைமுகங்களான ஜெபெல் அலிஇ ஹோபக்கன் துறைமுகங்களும் இலங்கைக்கு போட்டியாக உள்ளன.

இந்தியாவிலுள்ள கொச்சின்இ சென்னைஇ ஜவஹர்லால் நேரு துறைமுகங்கள் மேலும் மேலும் கப்பல் நிறுவனங்களை ஈர்த்து வருகின்றன.

இந்த போட்டிகளை சமாளிக்க இலங்கை துறைமுகங்களையும் அது தொடர்பான உட்கட்டமைப்புகளையும் விஸ்தரித்து வருகின்றது. இதனால் ஆகவும் பெரிய கப்பல்களையும் இங்கு கொண்டுவர முடியும். இறங்குதுறைகளை நடாத்துபவர்களுடனும் கப்பல் கம்பனிகளுடனும் பங்குதாரர்களாகி வருகிறோம் என அமைச்சர் கூறினார்.


Similar posts

Comments are closed.