இலங்கை படையினர் போர் குற்றங்களில் ஈடுபட்டமை தொடர்பில் ஜெர்மனியில் வழக்கு விசாரணை!

Written by vinni   // December 5, 2013   //

war-crimes1இத்தாலியின் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று இலங்கை படையினர் போர் குற்றங்களில் ஈடுபட்டமை தொடர்பில் எதிர்வரும் 7ம் திகதி ஜெர்மனியில் வழக்கு விசாரணை ஒன்றை நடத்தவுள்ளது.

இந்த வழக்கிற்காக 11 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு எதிரான இந்த வழக்கின் முறைப்பாட்டாளர் வட அயர்லாந்தின் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றை நடத்தும் ஜூட் லால் பெர்ணான்டோ என்பராவார்.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த வழக்கில் 10 பேர் சாட்சியமளிக்க உள்ளனர்.

வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 10ம் திகதி வெளியிடப்படும்.

ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஈழத் தமிழர்களை இலங்கை படையினர் கொலை செய்ததாக குற்றம் சுமத்தி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.