ஊழலில் மூழ்கும் ஆசியாவின் அதிசயம் – சிறிலங்கா

Written by vinni   // December 4, 2013   //

srilanka flgஊழல் பற்றிய அனைத்துலக பட்டியலில், சிறிலங்கா கடந்த ஆண்டைவிட 12 இடங்கள் பின்தள்ளப்பட்டுள்ளது.

ட்ரான்ஸ்பரன்சி இன்ரநசனல் வெளியிட்டுள்ள 2013ம் ஆண்டுக்கான பட்டியலில், வரிசைப்படுத்தப்பட்டுள்ள 177 நாடுகளில் சிறிலங்கா 91 வது இடத்தைப் பிடித்துள்ளது.

சிறிலங்காவுக்கு100இற்கு 37 புள்ளிகள் கிடைத்துள்ளன.

கடந்த ஆண்டைவிட சிறிலங்காவில் ஊழல்கள் மலிந்து போனதால், கடந்த ஆண்டில் 79 வது இடத்தில் இருந்த சிறிலங்கா இந்த ஆண்டு 91 வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பட்டியலில், டென்மார்க்கும், நியூசிலாந்தும் 91 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளன.

ஆப்கானிஸ்தான், வடகொரியா, சோமாலியா, ஆகிய நாடுகள், வெறும் 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தைப் பிடித்துள்ளன.

தெற்காசியப் பிராந்தியத்தில் சிறிலங்காவின் அண்டைய நாடுகளான இந்தியா 94 வது இடத்திலும், பாகிஸ்தான் 127வது இடத்திலும் உள்ளன.

நேபாளம் 116வது இடத்தையும், பங்களாதேஷ் 136 வது இடத்தையும், பிடித்துள்ளன.


Similar posts

Comments are closed.