பள்ளி, கல்லூரி போட்டிகளில் 15 பேர் விளையாட வேண்டும்: சச்சின்

Written by vinni   // December 4, 2013   //

sachinபள்ளி, கல்லூரி போட்டிகளில் 15 வீரர்களுடன் ஆட அனுமதிக்க வேண்டும் என்று சச்சின் டெண்டுகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டெண்டுல்கருக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் நேற்று பாராட்டு விழா நடந்தது.

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய டெண்டுல்கர், இளம் வீரர்களுக்கு அதிகமான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். ஐ.பி.எல் போட்டியை அறிமுகப் படுத்தியதன் மூலம் சிறிய நகரங்களில் கிரிக்கெட் வேகமாக பரவியது.

இன்று சிறிய நகரங்களில் இருந்து ஏராளமான வீரர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள்.

மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு நான் இந்த நேரத்தில் ஒரு வேண்டு கோளை வைக்கிறேன். பள்ளி கல்லூரிகள் இடையேயான போட்டிகளில் 11 பேருக்கு பதிலாக 15 வீரர்களை விளையாட அனுமதிக்க வேண்டும்.

ஏனென்றால் நீண்ட தூரத்தில் இருந்து பயணம் செய்து வரும் வீரர்கள் தங்களுக்கு வாய்ப்பபு கிடைக்குமா? என்று உறுதியாக தெரியாத நிலையில் உள்ளனர்.

மேலும் சில வீரர்கள் ஒரு வருடமாக ஆடியும், பள்ளிகளில் நடத்தப்படும் போட்களில் வாய்ப்பை பெற முடியவில்லை. ஒவ்வொரு வீரருக்கும் தங்களது திறமையை நிருபித்துக்காட்ட குறைந்த பட்சம் 3 போட்டியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் அந்த வீரர் சிறந்தவராக உருவாகும்போது மும்பை கிரிக்கெட் சங்கம் ஆதரவு கரம் நீட்டவேண்டும் எனவும் கூறியுள்ளார்


Similar posts

Comments are closed.