மேற்கிந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்: டெய்லர் இரட்டைசதம்

Written by vinni   // December 4, 2013   //

newzeland_west_004மேற்கிந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 609 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

நியூசிலாந்து, மேற்கிந்திய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டுனிடினில் நேற்று தொடங்கியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 367 ஓட்டங்கள் எடுத்து இருந்தது.

டெய்லர் 103 ஓட்டங்களும், மேக்குல்லம் 109 ஓட்டங்களும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று 2வது நாள் ஆட்டம் நடந்தது. அணித்தலைவர் மேக்குல்லம் 4 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் 113 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

ஆனால் முன்னாள் அணித்தலைவர் ரோஸ் டெய்லர் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்தார்.

நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 609 ஓட்டங்கள் எடுத்துள்ளது. மேலும் அணியில் டெய்லர் 217 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளார்.


Similar posts

Comments are closed.