இந்தியாவில் ‘ஹேக்கிங்’ அறிவை டெவலப் செய்த அமெரிக்க ஸ்னோடன்

Written by vinni   // December 4, 2013   //

indiaஅமெரிக்க ராணுவ கணனிகளை ஹேக் செய்வது குறித்த அறிவை எட்வர்ட் ஸ்னோடன் இந்தியாவில் மேம்படுத்திக்கொண்டதாக தவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்சியில் முன்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை பார்த்தவர் ஸ்னோடன்.

அமெரிக்கா பல்வேறு நாடுகளின் தூதரங்களை உளவு பார்த்த விவகாரத்தை அம்பலப்படுத்தி அமெரிக்கா அரசையும், அதன் உளவு அமைப்பையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்திய இவர் கணனிகளை ஹேக் செய்வது குறித்த அறிவை இந்தியாவில் வைத்து பெற்றுள்ளார்.

டெல்லியில் ஒரு வாரம் தங்கி அங்கு கோர் ஜாவா புரோகிராமிங் படித்துள்ளார், மேலும் ஹேக்கிங்கை எப்படித் திறம்படச் செய்வது என்பதையும் கற்றுக் கொண்டுள்ளார்.

டெல்லி மோத்திநகரில் உள்ள கோனிங் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தில் கடந்த 2010ம் ஆண்டு பயிற்சி பெற்றுள்ளார் இவர் அந்த ஆண்டு செப்டம்பர் 3ம் திகதி ஜப்பானிலிருந்து இந்தியாவுக்கு வந்துள்ளார். பின்னர் செப்டம்பர் 9ம் திகதி அமெரிக்கா திரும்பியுள்ளார்.

இதுகுறித்து கோனிங் சொல்யூன்ஸ் நிறுவனர் ரோஹித் அகர்வால் கூறுகையில், ஸ்னோடன் இந்தப் பயிற்சி வகுப்புக்காக 2000 டொலர் கட்டணம் செலுத்தி தனது பயிற்சியினை முடித்துள்ளார்.

மேலும் ஹேக்கிங்கை எப்படி சமாளிப்பது, தடுப்பது மற்றும் கணனிகளை பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து பயிற்சி தரப்படுகிறது. ஆனால் அதை ஸ்னோடன் வேறு விதமாக பயன்படுத்தியுள்ளார் என்றும் இங்கு பயிற்சிக்கு வந்தபோது சொல்லிக் கொடுக்கப்பட்டதை படு வேகமாக கிரகித்துக் கொண்டார் எனவும் கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.