ஒளிமயமான வரலாறு படைக்கும் மாற்றுத்திறனாளிகள்!

Written by vinni   // December 4, 2013   //

mettha_001உலகத்தில் சாதாரண மனிதர்கள் படைக்கும் சாதனையை விட மாற்றுத்திறனாளிகள் படைக்கும் சாதனைகள் ஏராளம் என்றே சொல்லலாம்.

சாதனைகள் படைக்க ஊனம் ஒரு தடையல்ல என்பதற்கு சான்றாய் பலரும் திகழ்கின்றனர்.

ஹெலன் கெல்லர் ஆடம்ஸ்: அமெரிக்க எழுத்தாளரான இவர் சிறந்த பேராசிரியர் மற்றும் நாவலர் ஆவார்.

மேலும் அரசியலிலும் ஈடுபாடு உள்ள இவர் இளங்கலை பட்டம் வென்ற முதல் ஊனமுற்ற நபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

ப்ரிடா கஹ்லோ: போலியோ நோயினால் பாதிக்கப்பட்ட இவர் வலி மற்றும் துன்பங்களை பிரதிபலிக்கும் ஓவியங்களை வரைந்து வெகுவாக மக்களை கவர்ந்தவர்.

20ம் நூற்றாண்டில் இவரது ஓவியம் சிறந்த ஓவியமாக தெரிவு செய்யப்பட்டு மெக்ஸிகோ சர்வதேச அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டது.

எழுத்தாளர் வேத் மேத்தா: இரண்டு கண்களை இழந்த இவர், இந்தியாவில் பிறந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் வாழ்ந்து வரும் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளராகத் திகழ்பவர்.

நியூயார்க்கிலிருந்து வெளிவரும் “தி நியூயார்க்கர்’ என்ற பத்திரிகையில் எழுத்தாளராகவும், நிரூபராகவும் பணிபுரிந்தவர்.

அமுதசாந்தி: தனக்கு ஒரு கை இல்லா விட்டாலும், மதுரையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி பெண்கள் பலருக்கு இப்போது இவர் தான் தன்னம்பிக்கை தரும் ஊன்று கோல்.

சாதிக்க நினைப்பவர்களுக்கு ஊனம் ஒரு தடையல்ல என்பார்கள். அதற்கு அக்மார்க் உதாரணம் அமுதசாந்தி.

தடைகளை கடந்து, தான் சாதித்தது மட்டுமல்லாமல் தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளி பெண்களுக்கும் நம்பிக்கை கீற்றாய் தெரிகிறார்.

அருணிமா சின்கா: உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இவர் ஒரு விபத்தில் தனது வலது காலை இழந்தார். பின்னர் செயற்கை கால் பொருத்தப்பட்டது.

ஏதேனும் சாதனை படைக்க வேண்டும் என வெறியுடன் இமயமலை ஏறுவதற்கான பயிற்சிகளில் அருணிமா சின்கா ஈடுபட்டார்.

இவர் 2013ம் ஆண்டு மே மாதம் இமயமலையில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி உலக சாதனை படைத்தார்.

எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் இந்திய மாற்று திறனாளி என்ற பட்டத்தையும், உலக அளவில் எவரெஸ்ட்டை தொட்ட முதல் பெண் மாற்று திறனாளி என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.


Similar posts

Comments are closed.