கடலுக்கடியில் 3 நாட்கள் உயிர்வாழ்ந்த அதிசய மீனவர்

Written by vinni   // December 4, 2013   //

ship_man_005நைஜிரியா நாட்டில் மீனவர் ஒருவர் 3 நாட்கள் 30 அடி கடல் ஆழத்தில் உயிர்வாழ்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நைஜிரியாவை சேர்ந்தவர் ஏக்கேன்(29), இவர் கப்பலில் சமையல் மற்றும் மீன்பிடி வேலையை செய்பவர்.

இந்நிலையில் இவர் பயணித்த கப்பல் திடீரென தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதில் இவர் மட்டும் 30 அடி ஆழத்தில் சுமார் 3 நாட்கள் உயிர்வாழ்ந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார்.

மேலும் இவருடன் பயணித்த 11 பேர்களில் 3 நபர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் மற்றவர்களின் நிலை குறித்து தகவல் எதுவும் அறியப்படவில்லை என்று கடற்படை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 


Similar posts

Comments are closed.