என் சார்பில் கடிதங்களை வழங்க செயலாளர்களுக்கு தடை விதித்துள்ளேன்: பிரதமர்

Written by vinni   // December 4, 2013   //

Prime_Minister_Jayaratne-e1335181898564-273x300தமது சார்பில், செயலாளர்கள் கடிதங்களை வழங்குவதற்கு தடை விதித்துள்ளதாக பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நிலையியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

என்னை சந்திக்க அதிகளவிலான பொதுமக்கள் வருகின்றனர். அவர்கள் சகலருக்கும் தன்னால் கடிதங்களை வழங்க முடியாது.

இதனால் என் சார்பில் கடிதங்களை வழங்கும் அதிகாரம், செயலாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இனிவரும் காலங்களில் என் சார்பில் கடிதங்களை வழங்க வேண்டாம் என அறிவித்துள்ளேன் என்றார்.

கடந்த ஒகஸ்ட் மாதம் கொழும்பில் 260 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கடத்தி வரப்பட்ட கொள்கலனை விடுவிக்க கோரி பிரதமர் டி.எம். ஜயரத்னவின் அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்த விடயம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.