பிரபாகரனின் வீட்டை அரசு முடிந்தால் சுவீகரித்து காட்டட்டும்!

Written by vinni   // December 4, 2013   //

prabakaran-e1353699527392விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான காணிகள் உட்பட எந்த சொத்துக்களையும் அரசுடமையாக்க இடமளிக்க போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

முடிந்தால் விடுதலைப் புலிகளின் தலைவரது வீட்டையும் சொத்துக்களையும் அரசுடமையாக்கி காட்டட்டும் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.

புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீட்டையோ சொத்துக்களையோ சுவீகரிக்க இடமளிக்க போவதில்லை. முடிந்தால் அரசாங்கம் சுவீகரித்து காட்டட்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வல்வெட்டித்துறை வீட்டை அரசுடமையாக்க போவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.

இது குறித்து கருத்து வெளியிடும் போதே சிவாஜிலிங்கம் இதனை கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.