புதிய ரயில் பாதையை ஆரம்பித்து வைத்தார் சோனியாகாந்தி

Written by vinni   // December 3, 2013   //

sonia3803ரேபரேலி – அக்பர்கஞ்ச் பகுதிகளுக்கிடையே புதிதாக அமைக்கப்படும் ரயில் பாதையை ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி நேற்று ஆரம்பித்து வைத்தார்.

296 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ரயில் பாதை புனரமைக்கப்பட்டு வருகிறது.

மறைந்த இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி தற்போதைய ஆளும் கூட்டணி அரசின் தலைவரான சோனியா காந்தி ஆகியோரது செல்லத் தொகுதி என பெயர் பெற்றது ரேபரேலி. தற்போது இந்த தொகுதியின் எம்.பி.யாக சோனியா காந்தி உள்ளார்.

ரேபரேலியில் இருந்து பைசாபாத் செல்லும் ரயில்களை அக்பர்கஞ்சுடன் இணைக்கும் 46.9 கிலோ மீட்டர் புதிய ரெயில் பாதையை சோனியா காந்தி நேற்று ஆரம்பித்து வைத்தார்.

தேசிய நெடுஞ்சாலை 56 – 24பி, மாநில நெடுஞ்சாலை 13 – 13ஏ வழியாக உருவாகும் இந்த புதிய ரயில் பாதை அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது.

இந்த புதிய பாதையில் 4 ரயில்களும் அமைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் 2 நடைமேடைகள் மற்றும் நவீன சிக்னல் மற்றும் தொலை தொடர்பு வசதியுடன் உருவாக உள்ளது.

 


Similar posts

Comments are closed.