80 இளம் பெண்களின் மண்டை ஓடுகள் கண்டுபிடிப்பு

Written by vinni   // December 3, 2013   //

china_skull_002சீனாவில் 4000 ஆண்டுகளுக்கு முன் பலியிடப்பட்ட பெண்களின் மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஷான்ஜி மாகாணத்தில் 4000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன ஷிமாவ் நகரத்தை 1976ம் ஆண்டு அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து புதைந்து போன இந்நகரத்தை தோண்டும் பணி தொடங்கியது.

இந்நிலையில் இந்நகரத்தின் கிழக்கு வாயிலின் முன்பு இரண்டு குழிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் ஒரு குழியில் 24 மண்டை ஓடுகள் வீதம் 48 மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் கிழக்கு பகுதி சுவரின் அருகே இருந்த மற்றொரு குழியில் இருந்து, 32 பெண்களின் மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.

இவை பெரும்பாலும் இளம் பெண்களின் மண்டை ஓடுகள் என்று கூறப்படுகிறது.

இவர்கள் அனைவரும் அடிமைகளாக இருந்து இருக்கலாம் என்றும், மதச்சடங்கின் படி பலியிடப்பட்டிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதன் மூலம் ஆதிகாலத்தில் வாழ்ந்த மக்களின் மதசிந்தனை, கலாசார பழக்க வழக்கங்கள் மற்றும் கட்டுமான திட்டங்கள் குறித்து மேலும் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.


Similar posts

Comments are closed.