வெங்காயம் கேட்டவரை அடித்த ஹோட்டல் ஊழியர்கள்

Written by vinni   // December 3, 2013   //

oniமும்பையில் உள்ள உணவகம் ஒன்றில் வெங்காயம் கேட்டவரை பணியாளர்கள் அடித்து வெளியில் விரட்டியுள்ளனர்.

தெற்கு மும்பையில் உள்ள பைகுல்லாவில் இருக்கும் பிரின்ஸ் அலி கான் மருத்துவமனையில் பணிபுரிபவர் மயூர் பிராடி ஜாதவ்(23). இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் 6 பேருடன் ஷாலிமார் உணவகத்திற்கு சென்றார்.

அங்கு சிக்கன் வருவல் மற்றும் பிரியாணிக்கு ஆர்டர் கொடுத்தனர். அவர்களுக்கு உணவுடன் ஒரு பிளேட் வெங்காயம் மட்டும் கொடுக்கப்பட்டது. அது போதவில்லை என்பதால் மேலும் வெங்காயம் கொண்டு வருமாறு ஜாதவ் பணியாளரிடம் தெரிவித்துள்ளார்.

வெகு நேரமாகியும் வெங்காயம் வராததால் ஜாதவ் பணியாளரை அழைத்து வெங்காயம் கேட்டார். அதற்கு பணியாளர் வெங்காய விலை ஏறிவிட்டதாக தெரிவித்தார்.

ஜாதவோ வெங்காய விலை குறைந்துவிட்டது என்று கூற இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மற்றொரு பணியாளர் வந்து ஜாதவின் சட்டையை பிடிக்க மற்றொருவர் உணவகத்தில் இருந்தவர்களை வெளியே அனுப்பிவிட்டு ஷட்டரை மூடியுள்ளார்.

பின்னர் பணியாளர்கள் ஜாதவை தாக்கியுள்ளனர். மேலும் ஒரு பணியாளர் கண்ணாடி டம்ப்ளரை வீசியதில் அவரின் கண் அருகே பட்டு ரத்தம் கொட்டியது.

இதனைத் தொடர்ந்து ஜாதவ் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அவரது புகாரின்பேரில் பொலிசார் முகமது ரிஸ்வான் ஜியாவுத்தீன் அகமது மற்றும் ப்ரிஜ்பான் ஆசாராம் சிங் ஆகிய 2 பணியாளர்கள் கைது செய்தனர்


Similar posts

Comments are closed.