மனைவிக்கு 15 நாள், காதலிக்கு 15 நாள்:கலக்கல் வாழ்க்கை

Written by vinni   // December 3, 2013   //

husbandandwifeஉத்திரபிரதேச மாநிலத்தில் மனைவிக்கு 15 நாளும், காதலிக்கு 15 நாள் என்று ஒதுக்கி வாழ்க்கையை நடத்துமாறு முதியவர் ஒருவருக்கு லோக் அதாலத் நீதிமன்றம் வினோத தீர்ப்பினை அளித்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் ஓம்காரேஸ்வர் என்ற ஊரைச் சேர்ந்தவர் இந்த முதியவர். மின்வாரியத்தில் பணியாற்றி வந்தா இவர் சமீபத்தில்தான் ஓய்வு பெற்றார்.

இவருக்கு ஒரு மனைவியும், காதலியும் உண்டு. இருவருக்கும் இவர் சமமாக நேரம் ஒதுக்க முடியவில்லை. அவர்களையும் ஒதுக்க முடியவில்லை.

இந்நிலையில், மனைவியை விட அதிக நேரம் காதலிக்கு ஒதுக்கி வந்ததோடு மட்டுமல்லாமல் அவரை தனது வீட்டுக்கே கூட்டி வந்து விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி, தன்னிடம் பாரபட்சமாகவும், காதலியிடம் அதிக பாசம் காட்டியும் கணவர் நடந்து கொள்வதாக லோக் அதாலத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கங்கா சரண் துபே, மனைவியும், காதலியும் ஒரே வீட்டில் வசிக்கலாம்.

ஒரு மாதத்தில் மனைவிக்கு 15 நாட்களையும், காதலிக்கு 15 நாட்களையும் பிரதிவாதி ஒதுக்க வேண்டும்.

மேலும் பிரதிவாதியின் வீட்டில் மொத்தம் 3 அறைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மனைவிக்கு ஒரு அறை, காதலிக்கு ஒரு அறை என ஒதுக்கித் தங்கிக் கொள்ள வேண்டும். நடுவில் உள்ள அறை பிரதிவாதிக்கானது. அதில் அவர் தங்கிக் கொள்ளலாம்.

இந்த நடு அறையிலிருந்து மனைவியின் அறைக்கும், காதலியின் அறைக்கும் போய் வருவதற்கு வசதியாக கதவு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பிரதிவாதியின் அசையும், அசையா சொத்துக்களில் அவரது மனைவிக்கும், காதலிக்கும் சம பங்கு உண்டு எனவும் தீர்ப்பளித்துள்ளார்.


Similar posts

Comments are closed.