கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்து சோனியா நீக்கம்!

Written by vinni   // December 3, 2013   //

Sonia_Gandhi_1125682cஉலககோடீஸ்வர அரசியல் தலைவர்கள் பட்டியலில் இருந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பெயரை திடீரென Huffingtonpost ஊடகம் நீக்கியுள்ளது.

உலகில் டாப் 20 கோடீஸ்வர தலைவர்கள் பட்டியலை Huffingtonpost வெளியிட்டிருந்தது.

இந்தப் பட்டியலில் பல நாட்டு மன்னர்கள், அதிபர்கள் இடம்பிடித்திருந்தனர். ஆனால் அரசு ரீதியாக பொறுப்பு வகிக்காத காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் 12வது இடத்தை இப்பட்டியலில் இடம் பிடித்திருந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அதுவும் இந்திய தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி சோனியா காந்திக்கு ரூ1.38 கோடிதான் இருக்கிறது. சோனியா பெயரில் சொந்தக் கார் கூட இல்லை. ஆனால் Huffingtonpost அவரை உலக கோடீஸ்வர தலைவர்களில் முதல் 20 இடத்தில் இடம்பிடித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக இங்கிலாந்து மகாராணி எலிசெபத்தைவிட முன்னணியில் உள்ளார் என்ற செய்தி அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதனை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து திடீரென Huffingtonpost ஊடகம் 12வது இடத்தில் இருந்த சோனியா காந்தியின் பெயரை நீக்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து Huffingtonpost ஊடகம் கூறுகையில், சோனியாவின் சொத்து மதிப்பு தொடர்பான தகவல்களை சரிபார்க்க முடியாத நிலையில் அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது என்றும் குழப்பத்துக்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் தெரிவித்துள்ளது.


Similar posts

Comments are closed.