ஜனாதிபதியின் சொல் வேறு செயல் வேறு – வடக்கு முதலமைச்சர்

Written by vinni   // December 3, 2013   //

vikneswaranஜனாதிபதியின் சொல்லும் செயலும் வேறாக இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறியையும், யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லையா என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

வடக்கில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபையுடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக நோர்வே தூதுவருடனான சந்திப்பின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார். இது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனிடம் கேள்வியெழுப்பிய போதே, ஜனாதிபதி எப்பொழுதும் எங்களுடன் ஒத்துழைப்பதாகக் கூறி வருகின்றார். அதனால் ஜனாதிபதியுடன் எங்களுக்குப் பிரச்சினை இல்லை. நடைமுறையில் அதற்கு முரணாக இருக்கின்றது. ஜனாதிபதியை குறை கூறுவதா அல்லது அவருக்கு கீழ் இருக்கும் அலுவலர்களை குறை கூறுவதோ என்று தெரியவில்லை.

வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது நான் ஒன்றைக் குறிப்பிட்டிருந்தேன். வடக்கில் நடப்பது மஹிந்த சிந்தனையா? அல்லது மஹிந்த ஹத்துருசிங்க சிந்தனையா? என்று கேட்டிருந்தேன் ஜனாதிபதி சொல்வதற்கு மாறாக இங்கு நடைபெறுவதே அவதானித்தால் இது புரியும்.

இங்கு இருக்கும் இராணுவத்தினருடன் தொடர்புடையவர்களையும் ஆளுநரையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாக தெரியவில்லை. நாம் கேட்பதை தருவதாகச் சொல்கிறார்கள். ஆனால் நடைமுறையில் அது வேறாக இருக்கின்றது ; க.வி.விக்னேஸ்வரன் குறிப்பட்டார்.


Similar posts

Comments are closed.