இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்

Written by vinni   // December 2, 2013   //

earthஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 9 பேர் பலியாகி உள்ளனர்.

கிழக்கு இந்தோனேஷியாவில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 10.24 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவான நிலநடுக்கத்தால், சவுமலாகி என்னும் நகரமும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கட்டிடங்களும் அதிர்ந்தன.

இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் வீட்டை வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர்.

இதற்கிடையே சிபைங் எரிமலை அருகே உள்ள குடலிங் கிராமத்தில் நிலநடுக்கத்தால் சில வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.

இதில் இடிபாடுகளில் சிக்கி 9 பேர் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Similar posts

Comments are closed.