ரஷ்ய எல்லையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள்

Written by vinni   // December 2, 2013   //

india missileகண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய 22 நவீன ஏவுகணைகளை எல்லைப் பகுதிகளில் வைக்க ரஷ்ய அரசு முடிவு செய்துள்ளது.

பனிப்போர் நடந்த காலத்தில் போட்டிப் போட்டுக் கொண்டு அமெரிக்காவும், ரஷ்யாவும் ஆயுதங்களை தயாரித்தன.

இதன்பின்னர் 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆயுதங்களை குறைக்கும் நோக்கில், அமெரிக்காவும், ரஷ்யாவும் அணு ஆயுத குறைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்நிலையில் செசன்யா பயங்கரவாதிகளால் ரஷ்யாவுக்கு அச்சுறுத்தல் இருப்பதால், அடுத்தாண்டு இறுதிக்குள் எல்லைப் பகுதியில் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் 22 ஏவுகணைகள் நிறுத்தப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து எல்லை பகுதியில் காற்றுப் புகாத இடத்தில் ஏவுகணைகள் நிறுத்தப்படும் என பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Similar posts

Comments are closed.