விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளுடன் மோதிய பிரபல நடிகர்

Written by vinni   // December 2, 2013   //

kalabavan_mani_002

நடிகர் கலாபவன் மணி அணிந்திருந்த பிரேஸ்லெட் பற்றி கொச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேக கேள்விகளை எழுப்பியதால் நடிகருக்கும், அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல நடிகர் கலாபவன் மணி, வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று கொச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கினார்.

 

விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் அவர் கையில் அணிந்திருந்த கனமான தங்க பிரேஸ்லெட் பற்றி விசாரித்தனர்.

 

இதனால் கோபம் அடைந்த கலாபவன் மணி, பிரேஸ்லெட்டை கழற்றி கவுண்ட்டரில் வீசிவிட்டு வெளியே சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

 

மேலும் அதிகாரிகளிடம் கலாபவன் மணி முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகவும், இதனால் பிரேஸ்லெட் குறித்து விளக்கம் அளிக்கும்படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும் என்று சுங்க இலாகா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

ஆனால் இந்த குற்றச்சாட்டை கலாபவன் மணி மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சமீபகாலமாகவே பொலிசாரும், சுங்க இலாகாவினரும் தன்னை வேண்டும் என்றே துன்புறுத்தி வருகின்றனர்.

 

மேலும் பிரேஸ்லெட் குறித்து என்னிடம் கேட்டனர். பல ஆண்டுகளாக அதை அணிந்திருப்பதாக பதில் அளித்தேன். அவர்களிடம் முரட்டுத்தனமாக நான் பேசவில்லை என்றும் கண்காணிப்பு கமெரா காட்சிகளை ஆய்வு செய்தால் அதுபற்றி தெளிவாக தெரியும் எனவும் கூறியுள்ளார்.

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் வனத்துறை அதிகாரிகள் அவருடைய காரை சோதனை போட்டபோதும் நடிகர் கலாபவன் மணி இதுபோன்ற சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

 


Similar posts

Comments are closed.