கனடாவிற்கான உயர்ஸ்தானிகராக ஜாலிய விக்ரமசூரிய

Written by vinni   // December 2, 2013   //

jaliya_CIஅமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய, கனடாவிற்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட உள்ளார். ஜாலிய விக்ரமசூரிய கடந்த ஐந்து ஆண்டுகளாக அமெரிக்கத் தூதுவராக கடமையாற்றியுள்ளார். 2008ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரையில் ஜாலிய விக்ரமசூரிய அமெரிக்கத் தூதுவராக கடமையாற்றியுள்ளார்.

இந்த மாதத்துடன் ஜாலியவின் பதவிக் காலம் நிறைவடைவதாகவும், அவர் கனடாவிற்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமை விவகாரங்கள் காரணமாக இலங்கைக்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகளில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, அமெரிக்கத் தூதுவர் பதவிக்கு சிலரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம், ஐக்கிய நாடுகளுக்கான இலங்கைப் பிரதிநிதி டொக்டர் பாலித கொஹணே, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம மற்றும் வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் ஷெனுகா செனவிரட்ன ஆகியோர் இந்தப் பதவிக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.


Similar posts

Comments are closed.