டொல்பின்களை பாதுகாக்க நியூசிலாந்து முயற்சி

Written by vinni   // December 1, 2013   //

dolphine_001மிகவும் அரிதாகி வரும் டொல்பின் இனத்தை பாதுகாப்பதற்கு நியூஸிலாந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மவ்விஸ் எனும் வகையைச் சேர்ந்த டொல்பின்கள் தற்போது நியூஸிலாந்தின் மேற்கு கரை தீவுகளிலேயே காணப்படுவதாகவும், தற்போது குறித்த வகையைச் சேர்ந்த 55 டொல்பின்களே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக பாதுகாப்பு வலயம் ஒன்றை அமைக்கவுள்ளதாக நியூஸிலாந்து அரசாங்கம் திர்மானித்துள்ளது.

உரிய நடவடிக்கைகள் எடுக்காத பட்சத்தில் இன்னும் 20 வருடங்களில் உலகின் சிறிய மற்றும் அரிதான டொல்பின் வகை முற்றாக அழியும் அபாயம் காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


Similar posts

Comments are closed.