பிரான்ஸ்- ஸ்பெயின் இடையேயான புல்லட் ரயில் சேவை தொடக்கம்

Written by vinni   // December 1, 2013   //

france_spain_president_001ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயினுக்கும், பிரான்சிற்கும் இடையே புல்லட் ரயில் சேவை தொடக்கப்படுகிறது.
இந்த சேவை வருகிற 15ம் திகதி முதல் செயல்பட உள்ளது என ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் நடந்த விழாவில் இருநாட்டு ஜனாதிபதிகளும் இணைந்து தெரிவித்தனர்.

மேலும் இருநாடுகளுக்கும் இடையேயான நட்பு மேலும் வலுவடையும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் ஸ்பெயினின் பார்சிலோனாவில் இருந்து பிரான்சில் உள்ள பாரீஸ் நகரை ஆறு மணி நேரத்தில் அடைய முடியும்.

இதற்கு முன் இந்த வழித்தடத்தில் சாதாரண ரயில்களின் பயண நேரம் 11 மணி நேரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.