பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய வாலிபர்

Written by vinni   // December 1, 2013   //

man_sameer_001பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய வாலிபர் ஒருவர் தனது தோழியுடன் வாழ்வதற்கு இங்கிலாந்து அரசிடம் அனுமதி கேட்டு காத்துக்கொண்டிருக்கிறார்.

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் பெண்ணாகவே பிறந்து, வளர்ந்தவருக்கு ஹார்மோன் மற்றும் குரோமோசோம்களின் கிளர்ச்சியால் ஆணாக வாழ விரும்பினார்.

வேலைக்கு சென்ற இடத்தில் கிடைத்த தோழியிடம் மன வேதனைகளைக் கொட்டித் தீர்த்த அவர், தோழியின் துணையுடன் ஆபரேஷன் மூலம் ஆணாக தன்னை மாற்றிக் கொண்டார்.

ஆணாக மாறிய அவர் தன் பெயரை சமீர் நீலம் என மாற்றிக் கொண்டு, குடும்பத்தை விட்டு வெளியேறி தன் தோழியுடன் குடும்பம் நடத்தத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் ஊடகங்கள் மூலம் இவர்களின் குடும்ப வாழ்க்கை வெளிச்சத்துக்கு வந்ததால் சமூகத்தின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளானர்கள்.

இதனால் இந்தியாவில் தங்களை சேர்ந்து வாழ விட மாட்டார்கள் என்று எண்ணிய சமீர், வேறு எந்த நாட்டுக்காவது போய் தோழியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று முடிவெடுத்தார்.

அதன்படி பாலியல் பேதங்களுக்காக சொந்த நாட்டில் புறக்கணிக்கப்படும் பாலினம் மாறிய மக்களுக்கு இங்கிலாந்தில் தாராளமாக வசிக்க அனுமதி அளிக்கப்படுவதாக அறிந்த அவர் தற்போது வடக்கு இங்கிலாந்தில் உள்ள பிராட்போர்டில் வாழ அனுமதி கேட்டு தஞ்சம் அடைந்துள்ளார்.


Similar posts

Comments are closed.