வடக்கில் தமிழர்களின் உரிமை மறுக்கப்படுகிறது – ஆஸ்லி வில்ஸ்

Written by vinni   // December 1, 2013   //

Northern_Province-298x212இலங்கையில் இன மற்றும் மத சுதந்திரம் இருக்கின்றதா என்பது தொடர்பில் ஆராய்வ தற்காக அமெரிக்க காங்கிரஸ் சபை விசேட குழுவொன்றை நியமித்துள்ளது. இந்தக்குழுவில் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளின் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

இலங்கையில் சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன என்றும், அவர்களின் வணக்கஸ்தலங்கள் திட்டமிட்ட அடிப்படையில் தாக்கப்படுகின்றன என்றும் அனைத்துலக ரீதியில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த நிலையிலேயே, அது தொடர்பில் ஆராய்வதற்காக அமெரிக்க காங்கிரஸ் சபை இந்தக் குழுவை நியமித்துள்ளது. குறித்த குழு தனது பணிகளையும் முன்னெடுத்து வருகின்றது.

இந்தக்குழுவின் முன்னிலையில், இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவராக முன்னர் செயற்பட்ட ஆஸ்லி வில்ஸும் சாட்சியமளித்துள்ளார். இலங்கையில் தற்போதைய அரசின் ஆட்சியின் கீழ் வடக்குத் தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றது என்றும், சிங்கள கிராமங்களை அப்பகுதிகளில் உருவாக்குவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது என்றும் அவர் சாட்சியமளிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 13 ஆவது அரசமைப்பின் பிரகாரம் அதிகாரங்களைப் பகிரும் பொறி முறையை இலங்கை அரசு பலவீனப் படுத்துகின்றது என்றும் ஆஸ்லி வில்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, அமெரிக்க அரசசார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளும், புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் இந்தக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்துள்ளனர். அனைத்து தரப்புகளிடமும் சாட்சியங்களை திரட்டியப்பின்னர் தனது விசாரணை அறிக்கையை காங்கிரஸ் குழு வெளியிடவுள்ளது என தெரியவருகிறது.


Similar posts

Comments are closed.