காணாமல் போன விமானம் விபத்து! பயணம் செய்த அனைவரும் பலி

Written by vinni   // December 1, 2013   //

passenger_plane_001காணாமல் போன மொசாம்பிக் விமானம் நமீபியாவில் விழுந்து நொறுங்கி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆப்ரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது மொசாம்பிக் நாடு.

இந்நாட்டின் தலைநகர் மபுடோவிலிருந்து நமீபியா அருகே அமைந்துள்ள அங்கோலா நாட்டின் தலைநகர் லுவாண்டாவிற்கு நேற்றுமுன் தினம் பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.
இதில் 27 பயணிகளும், 6 ஊழியர்களும் இருந்தனர்.

நமீபியாவிற்கு வடக்கே அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இருப்பினும் குறித்த விமானம், குறிப்பிட்ட நேரத்தில் அங்கோலாவிலும் தரையிறங்கவில்லை என்பது உறுதியானது.

இதனையடுத்து மறைந்த விமானத்தை தேடும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நமீபியாவின் வடகிழக்கே 6100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள வாப்வாடா தேசியப்பூங்காவில் விமானம் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பறந்துவிரிந்த மிருகங்கள் வசிக்கும் காட்டில், அங்கோலா நாட்டின் எல்லையோரமாக அந்த விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது.

இதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்து விட்டதாக நமீபியா பொலிசார் அறிவித்துள்ளனர்.


Similar posts

Comments are closed.