இந்தியாவில் அதிகரிக்கும் வேலையில்லா பிரச்சினை

Written by vinni   // December 1, 2013   //

worjஇந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சண்டிகரில் உள்ள தொழில் அமைச்சக பிரிவு இளைஞர்களின் வேலைவாய்ப்பு-வேலைவாய்பின்மை என்ற தலைப்பில் ஒரு ஆய்வு நடத்தியது.

கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2013ம் ஆண்டு மே மாதம் வரையில் இது குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பானது நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசம், மாவட்டங்கள் என ஒரு இலட்சத்து 33 ஆயிரத்து 354 வீடுகளில் நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில் நாடு முழுவதும் உள்ள பட்டதாரி இளைஞர்களில் மூன்றில் ஒருவர் வேலையில்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஆய்வறிக்கை மூலம் 15 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட இளையோரிடையே அதிகளவில் வேலை வாய்ப்பின்மை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்பின்மையின் விகிதம் கிராமப்புறங்களில் 36.6 விழுக்காடாகவும், புறநகர் பகுதிகளில் இதன் விகிதம் 26.5 விழுக்காடாகவும் காணப்படுகிறது. அதேநேரத்தில் எவ்விதக் கல்வியறிவு இல்லாத 15க்கும் 29 வயதுக்கும் உட்பட்ட இளையோரிடையேயான வேலைவாய்ப்பின்மை 3.7 விழுக்காடாகவும் காணப்படுகிறது.

 


Similar posts

Comments are closed.