கணவனை கத்தியால் குத்திய மனைவி

Written by vinni   // December 1, 2013   //

bloody_knife_528564029நெல்லை மாவட்டத்தில் தனக்கு சரக்கு வாங்கித் தராத கணவனை, மனைவி கத்தியால் குத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் புளியங்குடி டி.என். புதுக்குடியை சேர்ந்தவர் இளையராஜா என்ற முகமது இக்பால் (62) கூலித்தொழிலாளி. இவருக்கு 5 மனைவிகள்.

இவரது 5வது மனைவி நெல்லை டவுனைச் சேர்ந்த செய்யது அலி பாத்திமாவுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

தற்போது செய்யதலி பாத்திமா 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். கடந்த சில மாதங்களாக செய்யதலி பாத்திமா வீட்டிற்கு முகமது இக்பால் வராததால் குழந்தைகளை கவனிக்க முடியாமல் அவர் சிரமப்பட்டார்.

இந்நிலையில் நேற்று பேருந்து நிலையத்தில் முகமது இக்பாலை சந்தித்த பாத்திமா, அவரிடம் சென்று செலவுக்கு பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த செய்யது அலி பாத்திமா திடீரென தனது கைப்பையில் வைத்திருந்த கத்தியால் இக்பாலின் வயிற்றில் குத்தினார். இதில் படுகாயமடைந்த அவர் மயங்கி விழுந்தார்.
தகவலறிந்து பொலிசார் அங்கு வந்து இக்பாலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முகமது இக்பால் விசாரணையின் கூறுகையில், பாத்திமா தினமும் குவார்ட்டர் மது வேண்டும் என்று கேட்பார். என்னால் வாங்கி கொடுக்க முடியவில்லை. இதனால் அவரது வீட்டிற்கு செல்வதில்லை என்றும் இந்த ஆத்திரத்தில் அவர் என்னை கத்தியால் குத்தினார் எனவும் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பாத்திமா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.