இந்தியா , உலக கிண்ணத்தை கைப்பற்றுவது சந்தேகம்: அர்ஜூன ரணதுங்க

Written by vinni   // November 30, 2013   //

Indian-Team-Squad-ICC-Champions-Trophy-20132015ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெறவுள்ள உலக கிண்ண போட்டியில் இந்தியா கிண்ணத்தை கைப்பற்றுவது சந்தேகம் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் பலவீனமான முறையில் இருப்பதன் காரணமாக ஏனைய முன்னணி அணிகளுக்கு சவாலாக இருக்க மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேபோல, இந்திய அணியில் புதிதாக இணைந்துள்ள இளம் துடுப்பாட்ட வீரர்களும் தமது திறமைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் முனைப்புடன் ஈடுப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாடுகளில். இடம் பெறும் போட்டிகளுக்கு அவர்கள் பழக்கப்பட்டவர்களான நிலையைக் கொள்ள வேண்டும் எனவும் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.