கண்ணிமைக்கும் நேரத்தில் கொள்ளையடித்த திருடன்

Written by vinni   // November 30, 2013   //

theif_iphone_001.w245பிரான்சில் மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான வைரம் கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பிரான்சின் கேளிஸ் நகரில் உள்ள கார்ல்ட்டன் ஹொட்டலில் கடந்த ஜீலை மாதம் வைர கண்காட்சி நடைபெற்றது.

அப்போது பார்வையாளர் போன்று நுழைந்த நபர் ஒருவர், பாதுகாவலரை துப்பாக்கியால் மிரட்டி 103 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான வைரத்தை திருடிச் சென்றார்.

இந்நிலையில் தற்போது சிசிடிவி கமெராவில் எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த நபர் முகமூடி அணிந்திருந்த காரணத்தால், சிசிடிவி கமெராவில் முழு அடையாளமும் தெரியவில்லை.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ஹொட்டலில் பாதுகாப்பு பற்றி பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Similar posts

Comments are closed.