இணைய பயன்பாட்டில் முன்னிலை வகிக்கும் சுவிடன்

Written by vinni   // November 30, 2013   //

swiss_flag-415x260உலகளாவிய ரீதியில் இணையப் பயன்பாட்டில் சிறந்த நாடாக சுவிடன் தெரிவாகியுள்ளது. உலகளாவிய இணையத்தள அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்தப் பட்டியலில் அயல்நாடான நோர்வே இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

மக்கள் தம்மை ஒருங்கிணைப்பதற்கும், போராடவும், அநீதிகளைத் தட்டிக் கேட்பதற்கும் இணையம் மற்றும் சமூக இணையத்தளங்கள் பயன்படுத்தப்படுகின்றமை ஊக்கமளிக்கும் விடயம் எனவும் இந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 61 நாடுகள் கருத்தில் கொள்ளப்பட்டு, கடந்த ஆண்டு முதல் முறையாக வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் சுவிடன் முதலிடத்தைப் பெற்றிருந்தது.

இம்முறை மேலும் 20 நாடுகள் கருத்தில் கொள்ளப்பட்டமை மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையிலும் சுவிடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.


Similar posts

Comments are closed.