பொலிசார் கண்காணித்த பெண்ணை சந்தித்த மோடி: புகைப்படங்கள் வெளியானதால் பரபரப்பு

Written by vinni   // November 30, 2013   //

modi_madhuri_002குஜராத்தில் அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவின்படி கண்காணிக்கப்பட்டதாக கூறப்படும் இளம்பெண், முதல்வர் மோடியை சந்தித்த படங்கள் இணையதளத்தில் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குஜராத்தில் முதல்வர் மோடிக்கு நெருக்கமான அமைச்சர் அமித் ஷா. இவர் பொலிஸ் அதிகாரி ஜிங்காலை தொடர்பு கொண்டு இளம்பெண் ஒருவரின் நடவடிக்கைகளை கண்காணிக்க உத்தரவிட்டதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக அமைச்சரும், அதிகாரியும் பேசிய தொலைபேசி உரையாடல்களும் வெளியானது.

இந்நிலையில் பொலிஸ் அதிகாரி சிங்கால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2005ம் ஆண்டு குஜராத்தில் உள்ள கட்ச் நகரில் நடந்த விழாவின் போது முதல்வர் மோடியை சர்ச்சைக்குரிய அந்த பெண் சந்தித்து பேசுவது போன்ற புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளன.

பெண்ணின் பெயர் மாதுரி என்று குறிப்பிடப்பட்டு, முகம் மறைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த புகைப்படங்களில் ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் சர்மாவும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் தொடர்பாக பிரதீப் சர்மா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மலைத்தோட்ட திட்ட விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியராக இருந்த போது மோடியை அந்த பெண் சந்திக்க ஏற்பாடு செய்ததாக கூறியுள்ளார்.

அதன்பிறகு அந்த பெண்ணுடன் மோடி இமெயில் தகவல்களை தொடர்ந்து பரிமாறி வந்ததாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

அந்த பெண்ணை பொலிசார் கண்காணித்தது தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கடந்த வாரம் பிரதீப் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் மோடி மற்றும் மாதுரி சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் இணைய தளத்தில் வெளியானதால் குஜராத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 


Similar posts

Comments are closed.